குரங்கம்மைக்கும் உடலுறவுக்கும் என்ன தொடர்பு?

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (16:09 IST)
உலகெங்கிலும் உள்ள 78 நாடுகளில் 18 ஆயிரம் பேருக்கு மேல் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் உடலுறவு கொள்வது குறித்து புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.


யாருக்கு அவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது? அதில் என்ன கூறப்பட்டுள்ளது? குரங்கம்மைக்கும் உடலுறவுக்கு என்ன தொடர்பு?

குரங்கம்மையின் பரவலைத் தடுப்பதற்கு நாடுகள், சமூகங்கள், மற்றும் தனிநபர்கள் இந்த அபாயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு பரவலைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட வாய்ப்புள்ள குழுக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் கூறியுள்ளார்.

குரங்கம்மை தொற்றுவதற்கான வாய்ப்பை குறைக்க மேலும் சில ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார். தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்கள் தற்போதைக்கு தாங்கள் உறவு கொள்ளும் பாலியல் இணைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, புதிய பாலியல் இணையுடன் உடலுறவு கொள்வதை மறுபரிசீலனை செய்வது, புதிதாக பாலுறவு கொள்வோருடன் தங்களது தொடர்பு விவரங்களை பரிமாறிக் கொள்வது ஆகிய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள 98 சதவிகிதம் பேர் தன் பாலின உறவில் ஈடுபடும் ஆண்கள்; எனினும் குரங்கம்மை பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

பாலுறவு மூலம் மட்டுமல்லாமல் கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் வைரஸ் கிருமி தொற்றியுள்ள துணிகள் துண்டுகள் படுக்கைகள் உள்ளிட்டவற்றை தொடுவதன் மூலமும் குரங்கம்மை பாதிப்பு உள்ளாக வாய்ப்புண்டு.

தொற்றுக்கு உள்ளாகும் பாதிப்பை குறைக்கவும் குரங்கம்மை நோய் மேலதிகமாக பரவுவதை தடுக்கவும் தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களின் சமூகக் குழுக்கள் மீது நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய கவனிப்பு வழங்குவதுடன் அவர்களின் மனித உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வேறு எந்த ஒரு வைரஸ் கிருமியையும் போல குரங்கமை மீதான தவறான கண்ணோட்டம் மற்றும் பாகுபாடு நோய்ப் பரவலை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் எச்சரித்துள்ளார்.

கோவிட் - 19 தொற்றை போல தவறான தகவல் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல் இணையம் மூலம் வேகமாக பரவும் என்று கூறியுள்ள அவர் சமூக ஊடக நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் இவற்றை தடுத்து எதிர் கொள்ள செயலாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

குரங்கு அம்மை என்பது என்ன?

குரங்கு அம்மை என்பது அரிதான ஒரு வைரஸ் தொற்றாகும். இதனால் லேசான பாதிப்புகளே ஏற்படும் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள் எனவும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் ஒருவரொருக்கொருவர் எளிதில் பரவாது, இதனால் பரவலாக பாதிக்கப்படும் ஆபத்து மிகவும் குறைவானது. இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.

ஆரம்பக் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி போன்ற அறிகுறிகள் தென்படும். அதன் பின் காய்ச்சல் வந்ததும் தடிப்புகள் ஏற்படுகிறது. முதலில் அது முகத்தில் தோன்றி பின் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுகிறது. பொதுவாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களுக்கு பரவுகிறது.

அரிப்பு அதிகமாகி அது வலி மிகுந்ததாகிவிடும். அதன்பின் பல்வேறு கட்டங்களாக உருவெடுத்து சிரங்கு உண்டாகும். அதன்பின் அது மறைந்துவிடும். ஆனால் கொப்பளங்கள் தழும்பை ஏற்படுத்தலாம்.

பொதுவாக இந்த தொற்று 14 - 21 நாட்களில் தானாக சரியாகிவிடும். எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்