போதை கும்பலுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? எம்.பி., ராகுல் காந்தி கேள்வி

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (15:05 IST)
குஜராத்  மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மயங்கி விழுந்து 42 பேர் பலியான நிலையில், போதைப் பொருள் மாலியா கும்பலுக்கு யார் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில், குஜராத் மா நிலம் அகமதாபாத், பெடாட் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் உயிரிழந்தனர். 97 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் மா  நில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை 15 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பியும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வய நாடு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மா நிலத்தி கள்ளச்சாராயம் குடித்ததால் பல குடும்பங்கள் அழிந்து வருகிறது.  அதுமட்டுமின்றி போதைப்பொருட்களும் கைப்பற்றுள்ளது.  மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த மண்ணில் தற்போது, போதைப் பொருள் பழக்கம் அதிகரரித்துள்ளது கவலை அளிக்கிறது.  இந்தப் போதைப் பொருள் வி நியோகிக்கும் கும்பலுக்கு யார் பாதுகாப்பு அளிக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்