'தலையணையுடன் உடலுறவு' ஜூனியர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள்! போலீஸார் வழக்குப் பதிவு

புதன், 27 ஜூலை 2022 (17:01 IST)
மத்திய பிரதேச  மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான இந்தூரில் எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி இயக்கி வ்ருகிறது.
 
இங்கு படித்துவரும் சீனியர் மாணவர்கள் சிலர், ஜூனியர் மாணவர்களை ராகிங் என்ற பெயரில்  தலையணையுடன் உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். அத்துடன் சக மாணவிகளின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை ஆபாசமாகப் பேசும்படி கூறியதாகவும் தெரிகிறது.
 
சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை பல வகையில் துன்புறுத்தியும் செல்போனை பிடுங்கி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பேராசிரியர்களிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
இதுசம்பந்தமாக வழக்குப் பதியப்பட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்