அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்தது

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (11:02 IST)
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்துள்ளது. இது உலக அளவில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் திங்கட்கிழமை நிலவரப்படி, கொரோனாவால் சுமார் 50 மில்லியன் (ஐந்து கோடி பேர்) பாதிக்கப்பட்டனர் என தரவுகள் கூறுகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் வயதானவர்கள் தான் 2021ஆம் ஆண்டில் அதிகம் உயிரிழந்துள்ளனர்.
 
அமெரிக்காவில் கடந்த 11 வார காலத்தில் கொரோனா வைரஸால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த 11 வார காலத்தில் கடந்த காலத்தை விட வேகமாக உயிரிழப்பு நடந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்