பொங்கலுக்குப் பிறகு தொடங்குகிறது விஜய் & வம்சி கூட்டணி!

புதன், 15 டிசம்பர் 2021 (10:30 IST)
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தமிழ் தெலுங்கு படம் பொங்கலுக்கு பிறகு தொடங்க உள்ளது.

விஜய் பீஸ்ட் படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதால் இப்போது அவருடைய அடுத்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதியில் விஜய் தனது குடும்பத்தோடு லண்டனில் உள்ள மாமனார் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட செல்கிறார்.

அங்கிருந்து மீண்டும் பொங்கல் முடிந்துதான் திரும்புகிறார். அவர் லண்டனில் இருந்து திரும்பியதும் வம்சி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறதாம். அந்த படத்துக்கான பாடல் கம்போஸிங் வேலைகள் இப்போது சென்னையில் நடந்து வருகிறதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்