கொரியன் ரீமேக் படத்தில் ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ்!

புதன், 15 டிசம்பர் 2021 (10:14 IST)
கொரியன் ஹிட் படமான மிட் நைட் ரன்னர்ஸ் படத்தின் ரீமேக்கில் இவர்கள் இருவரும் நடித்துள்ள படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

கடந்த சில காலங்களில் தமிழில் வெளியான பல படங்கள் கொரியன் மொழி படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இப்போது ஓடிடிகளின் வரவு காரணமாக முறைப்படி ரீமேக் உரிமையை பெற்றே எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் இப்போது தெலுங்கில் ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோர் நடிப்பில் சாகினி டாகினி என்ற படம் 2017 ஆம் ஆண்டு தென் கொரியாவில் வெளியான மிட்நைட் ரன்னர்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்