மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஸ்பெயினில் இருந்து வந்தால் பிரிட்டனில் தனிமை

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (15:14 IST)
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஸ்பெயினில் அதிகரித்து வருகிறது.

அந்நாட்டின் ஒரு சில பகுதிகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அதிக எண்ணிக்கையில் கூடும் இளம்  வயதினருக்கே அங்கு தொற்று பரவி வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் வர்த்தகம் தொடங்கியுள்ள ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
ஞாயிற்றுக் கிழமை அன்று ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகளையும் சுற்றுலாப் பயணிகளை 14 நாட்கள் கண்டிப்பாகத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற  கட்டுப்பாட்டை பிரிட்டன் அரசு அமல்படுத்தியது.
 
இதற்கு அடுத்த சில மணி நேரத்தில் தாங்கள் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருப்பதாக ஸ்பெயின் அறிவிப்பை வெளியிட்டது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ்  பல்கலைக்கழக தரவுகளின் படி ஸ்பெயினில் 28,400 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் புதிதாக கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்