பில்கேட்ஸ் ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கை!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (17:27 IST)
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் புதிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
 
இந்நிலையில் இது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம். உலகம் முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக உயர்கிறது. 
 
விரைவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி விடும். ஆனால் இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் நம்மால் கூறமுடியவில்லை. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டிருப்பதால் டெல்டா வைரஸை போன்று பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட நிலைமை மிக மோசமாகிவிடும். 
 
மேலும், இந்த தொற்றில் இருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும். பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்