சிறுநீர் கழித்ததால் அமெரிக்க சுற்றுலா பயணிக்கு ரூ.8 லட்சம் அபராதம்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (14:20 IST)
அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்த போது பழமையான சிலை அருகே சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டார்

21 வயது அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இத்தாலிக்கு சுற்றுலாவுக்கு சென்றார். அங்குள்ள 16ஆம் நூற்றண்டின் பழமையான சிலையான ஹெர்குலஸ் சிலை அருகே அவர் சிறுநீர் கழித்துள்ளார்.

இத்தாலி மக்களால் புனிதமாக போற்றப்படும் அந்த சிலையில் அருகே அமெரிக்க சுற்றுலாப் பயணி சிறுநீர் கழித்ததை பார்த்த செக்யூரிட்டி உடனே அவரை பிடித்து உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து விசாரணை செய்த இத்தாலி போலீசார், இது கிரிமினல் குற்றம் இல்லை என்றாலும் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.8 லட்சம் அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்ட தவறினால் சிறையில் அடைக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டார். இதனால் வேறு வழியின்று அந்த சுற்றுலா பயணி அபராதத்தை கட்டிவிட்டு தனது நாட்டிற்கு திரும்பி சென்றுவிட்டார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்