சிவகுமார் என்றாலே நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த ஓவியர் மற்றும் இராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சிவகுமார் ஆற்றிய மகாபாரதம் சொற்பொழிவு தற்போது இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிவகுமார் கூறியதாவது:
மாருதி வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒரு வருடத்திற்கும் அதிகமான நேரமானது. அதனால்இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவ்ளோ பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன்' என்று கூறியுள்ளார்.