சிறுமி ரூபாவின் மூக்கை நாய் கடித்து தின்று விட்டதால் அவரது முகம் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருந்துள்ளது. இதனை பொருட்படுத்தாமல் ரூபாவை வில்லியம்ஸ் தத்தெடுத்துள்ளார். ரூபாவுடன் சேர்த்து முனி என்ற சிறுமியையும் வில்லியம்ஸ் தத்தெடுத்துள்ளார். சிறுமி முனி முகத்தில் அதிக தழும்புகள் இருந்துள்ளது.தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக நிதியை திரட்டியுள்ளார்.
அந்த நிதி உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், ரூபாவின் மூக்கு ஓரளவுக்கு சரியாகியுள்ளது மற்றும் முனியின் முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்துள்ளன. தற்போது இச்சிறுமிகள் இருவரும் நலமாக இருப்பதாக வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.