கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் நடைபெற்ற உலக பனி ஷூ விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தன்வீர் உசேன் சென்றார். அப்போது அவர் 12 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். புகாரின்பேரில் அவர் மார்ச் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார்.