இலங்கையில் பதட்டநிலை: வருகிறதா ஐ.நா பாதுகாப்பு படை?

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (21:26 IST)
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றதால் அங்கு அரசியல் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் இன்னும் பிரதமர் என்று கூறி வரும் ரணில், இலங்கையின் பாதுகாப்புக்கு ஐ.நா. படை வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு விடுதலைபுலிகள் உடனான இறுதிப்போர் நடைபெற்றபோதே ஐ.நா பாதுகாப்பு படை அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை இலங்கைக்கு வருமாறு ரணில் விக்ரமசிங்க கோரவில்லை என்றும் இதுபோன்ற ஒரு வதந்தியை ஒருசிலர் பரப்பிவிடுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்