சொத்துக்குவிப்பு வழக்கு: அசோக் ஆனந்த் எம்.எல்.ஏவுக்கு ஒரு ஆண்டு சிறை

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (20:58 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில் தற்போது புதுச்சேரி எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் என்பவருக்கு புதுவை நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றில் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புதுவை தட்டான்சாவடி தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து வரும் அசோக் ஆனந்த் என்பவரும் அவரது  தாயார் ஜெயலட்சுமி மற்றும் தந்தை ஆனந்த் ஆகியோர்களும் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 3.17 கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதிகள் மூவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தார். குற்றவாளிகளுக்கு தலா ஒரு லட்சம் அபராதமும், ஒரு வருட சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்