தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஹோட்டலுக்கு சென்று பரோட்டா செய்வார்கள், தோசை சுடுவார்கள், அதை அவர்களே வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவார்கள் போன்ற கூத்துகள் அடிக்கடி நடக்கும்.
அந்த வகையில், அமெரிக்காவில் தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் டிரம்ப் தேர்தல் பிரச்சாரம் செய்த போது திடீரென மெக்டோனால்டு கடைக்குள் நுழைந்தார். அங்கு அவர் "எனக்கு வேலை வேண்டும்" என்று கடை நிர்வாகியிடம் கேட்டு, உருளைக்கிழங்கை வைத்து பிரெஞ்சு ப்ரைஸ் சமைத்தார்.
அதை வாடிக்கையாளருக்கு அவர் தானே டெலிவரி செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில், அவர் இந்திய தம்பதிகளுக்கு டெலிவரி செய்தார். அவரை பார்த்தவுடன் ஆச்சரியம் அடைந்த இந்திய தம்பதிகள் நன்றி தெரிவித்த நிலையில், "எங்களைப் போன்ற சாதாரண மக்கள் அமெரிக்காவில் இருப்பதை நீங்கள் தான் சாத்தியமாக்கினீர்கள், உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினர்.
இந்திய தம்பதிகளின் நன்றியை ஏற்று கொண்ட ட்ரம்ப், "எனக்கு ஓட்டு போடுங்கள்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.