கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. சீன செயலியான டிக் டாக் செயலில் பல ஆபாசமான வீடியோக்கள் இடம்பெறுவதாகவும் இவை பெண்கள் மற்றும் குழந்தைகளின் மனதை பாதிப்பதாக கூறி இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று பல மாதங்களாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இந்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிக்டாக் உட்பட 58 செயலிகளை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தியாவை அடுத்து பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது
டிக் டாக் செயலியில் ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரிகமான உள்ளடக்கத்தை பரப்புவதாக பாகிஸ்தான் அரசு டிக் டாக் செயலியை தடை செய்துள்ளது. டிக் டாக் செயலியை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் இந்த செயலியை தாராளமாக தடை செய்யலாம் என தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது