ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகளை விற்பனை செய்ய தடை!

செவ்வாய், 29 ஜூன் 2021 (09:32 IST)
சமீபத்தில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் திறக்க அனுமதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உப்பாற்று ஓடைகளில் தனியார் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஓடையில் ஒட்டப்பட்டுள்ள கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா என கேள்வி எழுப்பியுள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை,  ஆலைக்கழிவுகளை ஓடையில் கொட்டியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது 
 
உப்பாற்று ஓடை பகுதியில் ரசாயனக் கழிவுகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கோரி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவுகளை மதுரை உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது மேலும் இதுகுறித்து 12 வாரங்களில் பொதுப்பணித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போதுவரை ஏன் செயல்படுத்தவில்லை என்றும் உயர்நீதிமன்றம் பொதுப்பணித்துறைக்கு கேள்விக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்