விருப்ப நாடுகளில் இருந்து இந்தியாவை நீக்கிய ஸ்விட்சர்லாந்து! அதிகரிக்கப் போகும் வரிவிகிதம்! - என்ன காரணம்?

Prasanth Karthick
ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (10:08 IST)

ஸ்விட்சர்லாந்து நாடு தனது விருப்பப் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியுள்ளதால் இந்திய நிறுவனங்களுக்கான வரி அதிகரிக்க உள்ளது.

 

 

பன்னாட்டு வணிகத்தில் இந்தியா - ஸ்விட்சர்லாந்து நாடுகளை சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இரு நாடுகளிலும் வணிகம் செய்து வருகின்றன. இதில் ஸ்விட்சர்லாந்து இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் என்ற ஒன்றை செயல்படுத்தி வருகின்றது.

 

அதன்படி, ஸ்விட்சர்லாந்தில் தொழில் தொடங்கும் பிற நாட்டு நிறுவனங்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்ற நிலையில், ஸ்விட்சர்லாந்தின் விருப்ப பட்டியலில் உள்ள நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 5 சதவீதம் வரி செலுத்தினால் போதுமானது. இதனால் பல இந்திய தனியார் நிறுவனங்கள் ஸ்விட்சர்லாந்தில் வணிகம் செய்து வருகின்றன.
 

ALSO READ: மனைவி, மாமியார் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்த ஐடி ஊழியர்.. 24 பக்க அதிர்ச்சி கடிதம்..!
 

இந்நிலையில் சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த உணவு நிறுவனமான நெஸ்ட்லேவின் சில தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செயற்கை ரசாயனங்கள் இருப்பதாக அவை இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இந்தியாவை தனது விருப்பப் பட்டியலில் இருந்து ஸ்விட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதனால் ஸ்விட்சர்லாந்தில் செயல்படும் இந்திய நிறுவனங்களின் விரிவிகிதம் 10 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்