இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரு அணிகளிலுமே மாற்றம் நடந்துள்ளது. இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸி அணியில் ஸ்காட் போலண்ட் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார்.