18 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தில் பிஎஸ்என்எல்.. ஒரே காலாண்டில் எத்தனை கோடி லாபம்?

Siva

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (07:35 IST)
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், 18 ஆண்டுகளாக நஷ்டத்தில் இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 262 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பதில் அளித்த அவர், பிஎஸ்என்எல் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.262 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது என்றும் கூறினார்.
 
2023-24 ஆம் ஆண்டின் அதே காலாண்டில் 1,262 கோடி நஷ்டத்தை சந்தித்த பிஎஸ்என்எல்தற்போது லாபத்தை நோக்கி சென்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் சேர்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்த நிலையில், விரைவில் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடந்தால், இன்னும் அதிக பயனாளிகள் பிஎஸ்என்எல்க்கு வருவார்கள் என்று கணிக்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்