அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், காபி, சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் வர்த்தகம் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளது. ஏப்ரல் 2 முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதன்படி, இந்திய பொருள்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு காரணமாக இந்திய பொருள்களின் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
காபி, சாக்லேட், வெண்ணெய், ஒயின் வகைகள், கார்கள், ஆடைகள், கடிகாரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படும் போது, இந்த வரி விதிப்பு பெரும் சுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.