ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் உயிருக்குப் பாதுகாப்பு- உக்ரைன் அமைச்சர் அறிவிப்பு

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (21:53 IST)
ரஷ்ய ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தங்களிடம் சரணடையும் வீரர்களுக்கு உயிர்பாதுகாப்பு வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

வல்லரசு நாடான ரஷியா, அண்டை நாடான உக்ரைன் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏழரை மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் போருக்கு உலக நாடுகள் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொருளாதாரத் தடைகள் விதித்தாலும், ரஷியா அதைப் பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில்,ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி, ஒலெக்ஸி ரெஸ்னிகோ  இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், ரஷ்ய ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தங்களிடம் சரணடையும் வீரர்களுக்கு உயிர்பாதுகாப்பு வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்