உக்ரைனின் முக்கிய நகரில் படைகளை திரும்ப பெற்ற ரஷ்யா !
சனி, 1 அக்டோபர் 2022 (20:53 IST)
உக்ரைன் நாட்டின் லைமன் நகரைக் கைப்பற்றிய நிலையில் தன் படைகளை ரஷ்யா திரும்ப பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 7 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனின் 4 பகுதிகளை ரஷ்ய வசமானதாக அதிபர் புதின் அறிவித்தார்.
இந்த நிலையில் ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ள நகரனாக லைமனில் இருந்து தன் படைகளை ரஷ்யா திரும்ப பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்ததகவலை ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த நகரல் உக்ரைன் நாட்டின் தலைவர் கார்க்கிவ்விற்கு தெங்கிழக்கில் சுமார் 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த நகரம் உக்ரைன் நாட்டின் முக்கிய போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கொள்ளும் தளமாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.