கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்; வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு!!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (10:50 IST)
ரஷ்யா மற்றும் வடகொரியாவிற்கு இடையே அமைந்துள்ள ஹசன் பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


 
 
மேலும், சீனா, வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகள் சந்திக்கும்  சாவோ ஜியோனாராமலை எல்லை பகுதியிலும் ரஷ்ய ராணுவம் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறதாம். 
 
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே எழுந்துள்ள போர் சூழலே ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கருதப்படுகிறது.
 
மேலும் வடகொரியாவை அவ்வப்போது ஆதரித்து வரும் ரஷ்ய தற்போது என்ன நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று புரியாத நிலையில் உலக நாடுகள் உள்ளன.
 
கொரிய தீபகற்பத்தில் ரஷ்யாவின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளதாக பரவலான கருத்து நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்