டிரம்பின் இந்த எச்சரிக்கைகள் குறித்து பதிலடி கொடுத்த வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ, 'நாய் குரைப்பதை போல் எங்களை சத்தமிட்டு மிரட்டலாம் என டிரம்ப் நினைப்பது நாயின் கனவு போன்றது என்றும், நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பதிலளிக்கும் போது கூறினார். இன்று அவர் ஐ.நா. பொது சபையில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.