இந்த தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உளவுத்துறையின் தோல்வி காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், இருநாள் விஜயமாக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை பாதியில் முடித்து, இன்று காலை அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார். தனது இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டு, முக்கிய அமைச்சர்கள் அதில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும், எதிர்வினையாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.