அக்டோபர் இரண்டாம் வாரத்தில் பேராபத்து....

வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (11:40 IST)
வடகொரியாவால் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் உலக நாடுகளுக்கு பேராபத்து காத்துக்கொண்டிருக்கிறது என தென் கொஇய அதிபர் எச்சரித்துள்ளார்.  


 
 
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 
மேலும், வட கொரியாவை எதிர்த்து பல பொருளாதார தடைகளையும் இந்த நாடுகள் விதித்துள்ளன. தற்போது தென் கொரிய அதிபர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
அடுத்த மாதம் வடகொரிய கம்பூனிஸ்ட் கட்சி ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் தென்கொரிய அதிபர்.
 
அவர் கூறியதாவது, இந்த விழாவின் ஒரு பகுதியாக ஆயுத சோதனை, அதிரடி ராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றில் வடகொரியா செயல்படக்கூடும். குறிப்பாக அக்டோபர் 10 முதல் 18 வரை பிற நாடுகள் விரும்பத்தகாத செயல்களில் வடகொரியா ஈடுபட அதிக வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்