ரஷ்யா- உக்ரைன் போர்: ஓரே நாளில் 710 வீரர்கள் பலியானதாக தகவல்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (14:50 IST)
ரஷிய  -உக்ரைன் இடையேயான போரில்  ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகிறது.

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர்தொடுத்து 11 மாதங்கள் ஆகிறது. இதுவரை  இரு தரப்புகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மேற்கு நாடுகள்  போர்   நிறுத்தம் செய்ய  வேண்டுமென  கோரிக்கை விடுத்தும் எந்த முடிவும் எட்டப்படாததால் இன்னும் போர் நடந்து வருகிறது.

சமீபத்தில்  உக்ரைன்  தலைநகர் கிவ் அருகிலுள்ள மஹூல்லா நகரில் உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக ரஷியா  வீரர்கள் தாக்குதல் நடத்தினர்., இதில், 600க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷியா தெரிவித்தது.

 ALSO READ: ரஷியா ராக்கெட் தாக்குதல் - 600 உக்ரைன் வீரர்கள் பலி!

இந்த  நிலையில்,  இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 710 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைனின் சுரங்க நகரமான சோலேடாரில் இரு தரப்புக்கு இடையேயான போரில், உக்ரைன் ராணுவத்தினரால் 710 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளதாகவும், ரஷ்ய வீரர்களின் உடல்கள் பாக்மூட் நகர வீதிகளில் குவிந்து கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்