கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி தன்னை தானே கழுத்தறுத்து கொண்ட வாலிபர்.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

புதன், 16 ஏப்ரல் 2025 (11:13 IST)
சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி தன்னைத்தானே கழுத்தறுத்துக் கொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சேலம் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி சூர்யா, அதே பகுதியை சேர்ந்த மோகனப்பிரியன் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலைத்துள்ளார்.
 
இருவரும் நேரில் சந்தித்தபோது மோகன பிரியனை தனக்கு பிடிக்கவில்லை என்று சூர்யா  கூறிவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக சண்டை நடந்த நிலையில், அவரது உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
 
ஜூலை மாதம் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் சூர்யாவின் திருமணம் குறித்து கேள்விப்பட்ட மோகனப் பிரியன். ஆத்திரமடைந்து, சூர்யாவை கல்லூரி செல்லும் போது வழிமறித்துள்ளார்.
 
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இருவரும் காரசாரமாக சண்டை போட்ட நிலையில், திடீரென மோகன பிரியன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவை சரமாரியாக குத்தி தப்ப முயற்சித்தார்.
 
ஆனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் மோகன பிரியனை பிடிக்க முயற்சித்த போது, தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டார்.
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
 
இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்