தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதை போல் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உச்சம் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலையில் மாற்றம் இருந்தாலும், வெள்ளி விலைகள் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், நேற்றைய விலையேல் தான் விற்பனையாகி வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,815 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 760 உயர்ந்து ரூபாய் 70,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,616 எனவும் ஒரு சவரன் ரூபாய் 76,928 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 110.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 110,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது