தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அமித்ஷா கடந்த வாரம் சென்னை வந்த போது அறிவித்த நிலையில், வெற்றி பெற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது, "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்" என்று யாரும் தெரிவிக்கவில்லை என்றும், டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி என்று தான் அமித்ஷா கூறி இருந்தார் என்றும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என்றும், ஆனால் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். "திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்" என்ற கருத்துக்களை உடைய அனைத்து கட்சியுடனும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்றும், அந்த முயற்சியின் ஒரு கட்டம்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.