டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

Siva

ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (14:45 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவர் எடுத்து வரும் அதிரடி கொள்கைகளை எதிர்த்து, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராடி வருகின்றனர்.
 
வெளிநாட்டினர் மற்றும் சட்டப்பூர்வமாக நுழைந்தோர் மீதான கடுமையான கட்டுப்பாடுகள்,  திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிப்பதில் மறுப்பு மற்றும் ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தடை, பல்கலைக்கழக நிதி முடக்கம், ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு திட்ட நிதியைக் குறைத்தது மற்றும் இந்தியாவுக்கு எதிரான வரிக் கொள்கைகள், அரசு ஊழியர்களை எளிதில் பணிநீக்கம் செய்ய அதிபரின் அதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சி ஆகிய டிரம்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
"இங்கு மன்னர்கள் இல்லை" (NO KINGS) என்ற மைய முழக்கத்துடன் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன. ட்ரம்ப்பின் முடிவுகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அவர் சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 2,500க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இந்த எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்