சீனாவிற்காக அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை திருடியதாக இந்திய வம்சாவளியான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் வசித்து வரும் 64 வயதான இந்திய வம்சாவளி ஆஷ்லே அமெரிக்க அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றியவர். ஜார்ஜ் புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றிய ஆஷ்லே, அமெரிக்காவின் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என இரு கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் பல முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.
இவர் சமீபமாக சீன அதிகாரிகளுடன் அடிக்கடி சந்திப்பு நடத்தியதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் இவரது வீட்டை அமெரிக்கா பாதுகாப்புத் துறையினர் திடீரென புகுந்து சோதனை செய்த போது அங்கு அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் பல அவரால் கோப்புகளாக மாற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, தேசத் துரோகம் உள்ளிட்டவற்றிற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K