'இந்தி எதிர்ப்பு மசோதா' கொண்டு வரும் திட்டம் இல்லை: உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு..!

Mahendran

வியாழன், 16 அக்டோபர் 2025 (11:49 IST)
நேற்று தமிழக அரசு இந்தி பயன்பாட்டை கட்டுப்படுத்த 'இந்தி எதிர்ப்பு மசோதா' கொண்டுவர திட்டமிடுவதாக தகவல் வெளியானது. முதலமைச்சர் இல்லத்தில் அவசர கூட்டம் நடந்ததாக வந்த இந்த செய்தி, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஆனால் மாலையில் தி.மு.க. அத்தகைய மசோதாவை ஒத்திவைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அரசு நடத்தும் 'தமிழ்நாடு உண்மைச் சரிபார்ப்பு  குழு, இது முற்றிலும் பொய்யான செய்தி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. சட்டசபைக்கு அத்தகைய முன்மொழிவு எதுவும் வரவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.
 
ஆனாலும், இந்த வதந்தியை பயன்படுத்தி, பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளில் தி.மு.க. தொண்டர்கள் பதாகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை எரித்து, "தமிழ்நாட்டிற்கு இந்தி தேவையில்லை" என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 
 
அண்ணாமலை, உண்மை சரிபார்ப்புக் குழுவை தி.மு.க.வின் பிரச்சார இயந்திரம் என்று சாடினார். தமிழை காக்கும் முதலமைச்சரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இந்த போராட்டம் நடந்ததாக தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்