நாளை தீபாவளி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து 18 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஆண்டுதோறும் வேலைக்காக சென்னையில் வாழ்ந்து வரும் மக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அவ்வாறாக இந்த ஆண்டும் ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட நிலையில் அவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், தீபாவளிக்காக 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்கலில் மட்டும் 6,920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளிக்காக கடந்த 3 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட்டு வரும் நிலையில் அவற்றில் 6,15,992 பயண்ணிக சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள் மட்டுமல்லாமல் ரயில்கள், சொந்த வாகனங்கள் என பலவற்றிலும் மக்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர் சென்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால் இதுவரை 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்துகள் மூலம் 6.15 லட்சம் பேர், ரயில்களில் 9.5 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 2 லட்சம் பேர், சொந்த வாகனங்களில் 1.5 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில் சென்னையின் பிரதான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Edit by Prasanth.K