உலக அளவில் உள்ள மெட்ரோ நிறுவனங்கள் குறித்து வாடிக்கையாளர்களின் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதல் இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் பல நாடுகளிலும் மெட்ரோ ரயில் சேவைகளை பல நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் தங்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை வழங்கவும் COMET எனப்படும் மெட்ரோ நிறுவன கம்யூனிட்டி செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்த அமைப்பில் சென்னை மெட்ரோவும் இணைந்தது. இந்நிலையில் 2025ல் மெட்ரோ சேவை தொடர்பான கருத்துகளை வாடிக்கையாளர்களிடம் பெறும் முயற்சியில் அனைத்து மெட்ரோ நிறுவனங்களும் ஈடுபட்டன. அதில் சென்னை மெட்ரோ 6500 வாடிக்கையாளர்களின் கருத்துகளை பெற்று உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் திருப்தி மதிப்பெண்ணில் சென்னை மெட்ரோ 4.3/5 என்ற மதிப்பை பெற்றுள்ளது.
Edit by Prasanth.K