ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா? - ட்ரம்ப் பேசியது குறித்து மத்திய அரசு விளக்கம்!

Prasanth K

வியாழன், 16 அக்டோபர் 2025 (12:51 IST)

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி  தன்னிடம் சொன்னதாக ட்ரம்ப் பேசிய நிலையில் அதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டித்த ட்ரம்ப், இதற்காக இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்தை நிறுத்திக் கொள்ளப்போவதாக பிரதமர் மோடி தன்னிடம் சொன்னதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. நிலையான எரிபொருள் விலை மற்றும் பாதுகாப்பான விநியோகம் இரண்டும்தான் இந்தியாவின் எரிசக்திக் கொள்கை.

 

எங்கள் எரிசக்தி கொள்முதலை அமெரிக்காவுடனும் விரிவுப்படுத்த முயன்று வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்த முயற்சி சீராக முன்னேறியுள்ளது. தற்போது அமெரிக்கா இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்