நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுவாசப்பிரச்சினை உடையவர்கள் பட்டாசு வெடிப்பதையும், பொதுவெளிக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது அருகே தண்ணீர் வாளி, நனைத்த போர்வை உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது செருப்பு அணிந்து கொள்ள வேண்டும். மெழுகுவர்த்தி, விளக்கு அருகே பட்டாசுகளை வைக்கக் கூடாது.
மின்கம்பங்களுக்கு அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு துறையினர் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கவும், மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெச்சரிக்கையாக செய்து வைக்கவும், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K