கிம் இஸ் பேக்: டிரம்பின் வார்த்தயை மீறி ஏவுகணை சோதனையில் வடகொரியா!

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (15:05 IST)
வடகொரிய அதிபர் கிம் கடந்த சில மாதங்களாக மைதி காத்து வந்த நிலையில், இன்று அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை மீறி ஏவுகணை சோதனையில் ஈடுப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 
இந்த தகவலை அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. வடகொரியா நடத்தி வந்த அணு ஆயுத சோதனைகளால் அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் வடகொரியாவை கடுமையாக எதிர்த்தனர். 
 
வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை என நிலைமையின் பதற்றம் தணிந்தது. அமெரிக்க அதிபர் வடகொரியா அதிபர் சந்திப்பில் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. 
 
ஒப்பந்தத்தின்படி வடகொரியாவும் தனது அணு அயுத சோதனை கூடங்களை அழிக்கும் பணியை துவங்கியது. ஆனாலும், அமெரிக்கா பொருளாதார தடைகளை சற்றும் குறைக்கவில்லை. இதனால் மனக்கசப்பும் ஏற்பட்டது. 
 
இந்நிலையில், புதிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடங்கியுள்ளது. இது எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. இது தொடர்பான படங்கள் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
பொருளாதார தடைகளை நீக்காத காரணத்தால் டிரம்ப் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த கிம் இவ்வாறு ஏவுகணை சோதனையில் ஈடுப்பட்டுள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்