இதுகுறித்து அந்த சிறுவன் தனிஷ்க், மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனிஷ்க், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களை தொடாமல், அவர்களின் இதயத்துடிப்பை கண்டறியும் சாதனத்தையும் கண்டறிந்துள்ளார்.
புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்ட தனிஷ்க், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரிசெய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கலிபோர்னியா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிஷ்க், அடுத்த 5 வருடங்களுக்குள் தனது எம்.டி படிப்பை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.