அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுமா?

Arun Prasath
வியாழன், 13 பிப்ரவரி 2020 (14:11 IST)
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் ஒலிம்பிக் 2020 போட்டிகள் ரத்து செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை என டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், சீனாவை தொடர்ந்து கிட்டதட்ட 25 க்கும் அதிகாமான நாடுகளில் பரவியுள்ளது. இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவில் மட்டுமே 1357 பேர் பலியாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து கொரோனா வைரஸால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுமா என கேள்விகள் எழுந்துவந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பானின் முன்னாள் பிரதமரும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவருமான யோஷிரோ மோரி, கொரோனா வைரஸால் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கமிட்டி ஒன்று அமைக்கப்படும். அக்கமிட்டி ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வீரர்கள், வீராங்கனைங்கள், போட்டிகளை காணவரும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு கொரோனா நோய் குறித்து பரிசோதனை செய்து உறுதி செய்யும்” என கூறியுள்ளார்.

வருகிற ஜூலை 24 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்