மனித மூளையில் நியூராலிங்க் சிப்.. விரைவில் 2-வது நபருக்கு பொருத்தம்: எலான் மஸ்க்

Mahendran
வியாழன், 11 ஜூலை 2024 (12:40 IST)
மனித மூளையில் நியூராலிங்க் சிப் பொருத்தும் முயற்சி கடந்த ஜனவரி மாதம் நடந்த நிலையில் தற்போது இரண்டாவது நபருக்கு இந்த சிப் பொருத்த இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஜனவரி மாதம் சோதனை அடிப்படையில் மனித மூளையில் நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்டது என்பதும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயதான நபருக்கு பொருத்தப்பட்டு கணினி மூலம் அவரை இயக்கும் முயற்சி நடந்தது என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியை அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுள்ளதாக கூறியுள்ள எலான் மஸ்க், விரைவில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
மூளையில் சீப் பொருத்தும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது என்றும் அனைத்தும் சரியாக நடந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒற்றை இலக்கத்தை தாண்டி நியூராலிங்க் சிப் பொருத்தம் பணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த சிப் பொருத்துவதன் மூலம் மூளைக்கும் கணினிக்கும் இடையிலான இணைப்பை கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கி அரிய சக்தி பெற முடியும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்