இனிமேல் லைக் செய்வதை மற்றவர்கள் பார்க்க முடியாது: எலான் மஸ்க் கொடுத்த அப்டேட்..

Siva

வியாழன், 13 ஜூன் 2024 (07:29 IST)
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தில் இனிமேல் பயனாளிகள் எந்த பதிவுக்கு லைக் செய்கிறார்கள் என்பதை மற்றவர்கள் பார்க்க முடியாது என்று எலான் மஸ்க் புதிய அப்டேட்டை தந்துள்ளது அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே எலான் மஸ்க் பயனாளிகள் பதிவு செய்யும் லைக்குகள் தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது பயனர்களை எதிர்மறை விமர்சனங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு பயனாளி இன்னொரு பயனாளியின் பதிவுக்கு லைக்ஸ் பதிவு செய்தால் அதை மற்ற பயனாளர்கள் இனிமேல் பார்க்க முடியாது. இந்த இந்த பதிவு காரணமாக சர்ச்சைக்குரிய பதிவுகளை லைக் செய்யும் நபர்களுக்கு ஏற்படும் நெருக்கடி தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயனர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் லைக் செய்யும் நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கவே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பயனாளி லைக் செய்வது என்பது தனி உரிமை அம்சம் என்றும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது . ஆனால் அதே நேரத்தில் இந்த வசதி பிரீமியம் சந்தா உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்