உலகமெங்கும் தேர்தல்கள் இப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் நடத்தப்படுகின்றன. இதனால் தேர்தல் நேரம் மற்றும் செலவு குறைவதாக சொல்லப்படுகிறது. மேலும் இதற்காகப் பயன்படுத்தப்படும் எந்திரம் மறு உபயோகப்படுத்தலுக்கு உகந்தது என்பதால் அடுதத்டுத்த தேர்தல்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் போன்ற சாதகமான அம்சங்கள் சொல்லப்படுகின்றன.
ஆனாலும் இந்த எந்திரங்கள் ஹேக் செய்யப்படலாம் என்ற எதிர்க்குரல்களும் எழுந்து, பழையமாதிரி வாக்குச்சீட்டு முறைக்கே செல்ல வேண்டுமென்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் “வாக்கு எந்திரங்கள் மனிதர்கள் மூலமாகவோ அல்லது ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாகவோ எளிதில் ஹேக் செய்யப்படலாம். அதற்கான வாய்ப்பு சிறிய அளவாக இருந்தாலும், ஆபத்தானது” எனக் கூறியுள்ளார்.