மெக்சிகோவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்! – பீதியில் மக்கள்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:49 IST)
மெக்சிகோ நாட்டில் கடந்த சில நாட்கள் முன்னதாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கடந்த 19ம் தேதியன்று பயங்கர நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மெக்சிகோவின் மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் ஏற்பட்டது.

இதனால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் பல இடங்களில் சுவர்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்தே மக்கள் மீளாத நிலையில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அகுய்லிலா பகுதிக்கு தென்மேற்கே 46 கி.மீ தொலைவில் கண்டறியப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. எனினும் இந்நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் மெக்சிகோ மக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்