மெக்சிகோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ஒருவர் பலி!

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (08:22 IST)
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கண்டத்தின் தெற்கு நாடான மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.05 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.

மைக்கோன் மாகாணத்தின் எல்லைக்கு அருகே 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னதாக தைவானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மெக்சிகோவிலும் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்