தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறை ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் காலி பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வாறாக தற்போது தாலுகா மற்றும் ஆயுதப்படையில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, மொத்தம் 1299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு, உடல் தகுதி சோதனை, நேர்காணல் உள்ளிட்ட படிநிலைகளில் தேர்ச்சி பெற்றபின் பணியமர்த்தப்படுவார்கள்.
காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கு மாதம் ரூ.36,900 - ரூ.1,16,600 ஊதியமாக வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்கள் 7ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3. மேலும் தகவல்களுக்கு https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Edit by Prasanth.K