மராத்தி பேச தெரியாதவர்கள் கன்னத்தில் அறையுங்கள் என சமீபத்தில் ராஜ் தாக்கரே தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வங்கி ஊழியர்கள் மராத்தி பேசாததால் அவரது கட்சி தொண்டர்கள் அவர்களை கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், புனே அருகே உள்ள வங்கியில் நுழைந்த இந்த கட்சியின் தொண்டர்கள் மேலாளரிடம் மராத்தியில் பேசுமாறு கூறினர். அப்போது அவர் மராத்தியில் பேச தடுமாறியதால், அவரை கன்னத்தில் அறைந்தனர். அதேபோல், இன்னொரு ஊழியருக்கும் மராத்தி தெரியாததை அடுத்து அவரையும் தாக்கினர்.
இதனால், வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மராத்தி மொழி பேசத் தெரியாத ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.