திடீரென மஞ்சளாக மாறிய மனிதன்: சீனாவில் விநோதம்?

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (08:29 IST)
சீனாவில் அதிகப்படியாக புகைப்பிடித்ததால் ஒருவரின் உடல் முழுவதும் மஞ்சள் நிறத்திற்கு மாறியுள்ளது. 
 
சீனாவில் 60 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக தொடர்ந்து புகைப்பிடித்து வந்த காரணத்தால் அவரது உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. அதாவது அதிகப்படியாக புகைப்பிடித்ததால் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளது. 
 
நோயின் தாக்கம் அதிதீவிரமாக இருந்த காரணத்தால் தோல் தன்னுடைய இயல்பு தன்மையை இழந்து மஞ்சளாக மாறியுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் நோயாளியின் கணையத்தில் இருந்த பித்த நீர் கட்டியை நீக்கியதும் அந்த மஞ்சள் நிறம் மறைந்துள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்