புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் தற்கொலை படை தாக்குதல்; 26பேர் பலி

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (16:10 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நவ்ரூஸ் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தின் போது தற்கொலை படை நடத்திய தாக்குதல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நவ்ரூஸ் விழா கொண்டாடப்பட்டுள்ளது. நவ்ரூஸ் ஈரானிய புத்தாண்டு விழா கொண்டாட 100க்கும் அதிகமான மக்கள் கூடிய கூட்டத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளது.
 
இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர், 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஷியா சிறுபான்மையினர் அதிகளவில் அந்த கூட்டத்தில் இருந்துள்ளனர். ஷியா சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகி உள்ளது. 
 
இந்த தாக்குதல் அலி அபாத் மருத்துவமனை வாயிலில், காபூல் பலகலைக்கழகத்திற்கு அருகில் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்